கணினி ஆசிரியர் போட்டி தேர்வு அரசிதழில் பாட திட்டம் வெளியீடு

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
அரசு பள்ளி கணினி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான பாட திட்டம், அரசிதழில் வெளியிட பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகள், நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில், கணினி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 கணினி ஆசிரியர் பதவிக்கான கல்வி தகுதி, இளநிலை படிப்பில் இருந்து, முதுநிலை படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புடன், பி.எட்., படித்தால் மட்டுமே, கணினி ஆசிரியர் பணியில் சேர முடியும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும், தற்போது காலியாக உள்ள, 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை, போட்டி தேர்வு வழியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது, தெரிவிக்கப்படவில்லை.இந்நிலையில், தேர்வுக்கான பாட திட்டம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. 

கணினி அறிவியல், 130; பொது அறிவு, 10; கல்வி உளவியல், 10 மதிப்பெண் என, வினாத்தாள் இடம் பெறும்.கணினியின் துவக்கம், வரலாறு, சி.பி.யு.,வின் தொழில்நுட்பம், தற்போதைய நவீன தொழில்நுட்பமான, 'டேட்டா' அறிவியல், இணையதள மேலாண்மை, இணையதளம் உருவாக்கும் முறை, சர்வர் பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய பாடங்கள், தேர்வில் இடம் பெறும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments