Title of the document
 பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.    இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘ஆண்டுதோறும் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரிஎன 3 முறை சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.    இதில்கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.    அதைத்தொடர்ந்து நடப்பாண்டும் முதல்கட்டமாக ஏப்ரல், மேமாதங்களில் குடியிருப்பு வாரியான சிறப்பு கணக்கெடுப்பு (6-18 வயது) நடத்தி முடிக்க வேண்டும்.    அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியப் பயிற்சியாளர்கள், ஆர்எம்எஸ்ஏ பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன் வாடிபணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி கணக்கெடுப்பு பணியை முதன்மைகல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்கவேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post