பாரதியார் பல்கலை மற்றும் அதனால் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பி.எச்டி., முழுநேரம் மற்றும் பகுதிநேர மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.2019 ஜூலையில் துவங்கவுள்ள இப்படிப்புக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2018 ஜூனில் பல்கலை தரப்பில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நெட்., ஸ்லெட்., கேட்., விஞ்ஞானிகள், எம்.பில்.,உள்ளிட்ட தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை, பல்கலையின் இணையதளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம், 600 ரூபாய்; இதனை பாங்க் ஆப் இந்தியா செலான் அல்லது, டிமாண்ட் டிராப்டாக, பதிவாளர், பாரதியார் பல்கலை, கோவை 641046' என்ற முகவரியில் கோவையில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் விண்ணப்ப கட்டணத்துடன் இணைத்து, பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இறுதி நாள், ஏப்., 5ம் தேதி. விபரங்களுக்கு, http://www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Post a Comment