8,888 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

 8,888 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 
தமிழகத்தில் 8,888 காவலர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்தத் தேர்வு குழுமத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காவல்துறை, சிறைதுறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 62 பின்னடைவு பணியிடங்கள் உள்பட காலியாக உள்ள  8888 இரண்டாம் நிலைக் காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இணையத்தளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம். இம் மாதம் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வுக் குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் இம் மாதம் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற செல்லிடப்பேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் என்றார் அவர்.

Post a Comment

0 Comments