Title of the document




ஒரு பொருளைத் தொட்டால் அது கதகதப்பாக இருப்பதும், சில்லென்றிருப்பதும், நம் உடலிலுள்ள தோல் பரப்பின் வெப்பம் அப்பொருளில் பரவுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும்.

நமது தோலிலிருந்து வெப்பம் வெளியேறுகையில், தோலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் வெப்ப உணர்வு நரம்பிலுள்ள உயிர் அணுக்களுக்கு சில்லென்ற உணர்வு தோன்றுகிறது. உலோகம் மிகவும் சிறந்ததொரு வெப்பக் கடத்தியாகும். எனவே அதனைத் தொடும்போது கையிலுள்ள வெப்பம் வெளியே கடத்தப்பெற்று நமக்குச் சில்லென்ற உணர்வு தோன்றுகிறது.

குளிர் காலத்தில் நமது சுற்றுச்ச்சூழலின் வெப்ப அளவு நமது உடலின் வெப்ப அளவைவிடக் குறைவாக இருக்கும். அப்போது உலோகத்தாலான பொருட்களைத் தொட்டால் மிகவும் சில்லென்ற உணர்வு உண்டாகிறது. ஆனால் மரத்தாலான பொருட்கள் அரிதில் வெப்பக் கடத்திகள்; உலோகங்களைப் போன்று வெப்பத்தை அவ்வளவாகக் கடத்துவதில்லை; எனவேதான் மரப் பொருட்களைத் தொட்டால் கைத்தோலின் வெப்பம் வெளியேறாமல் கதகதப்பான உணர்வு ஏற்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post