அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி [ வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் ]

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
https://4.bp.blogspot.com/-qcm0hci0Y8g/XHZID-sZDoI/AAAAAAAAfXM/PeYQJcUhbys9DYKSbt0X9QwcnIzODEUnQCLcBGAs/s1600/_20190116_223736.jpg


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதில், தமிழகத்தில் 3,688 உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகள் என 7,728 பள்ளிகளில் ரூ.15.30 கோடி செலவில் பயோ மெட்ரிக் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையிலும், பெரம்பலூரிலும் தலா ஒரு பள்ளிகளில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நல்ல திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments