Title of the document

அறிக்கை 26.02.2019
=================
வருகின்ற மார்ச் எட்டாம் தேதி தேதி  ஜாக்டோ ஜியோ நடத்துகின்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது
===================

ஜாக்டோ ஜியோ நேற்று உயர்மட்ட குழு முடிவின்படி வருகின்ற 8 3 2019 அன்று  ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாலை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பங்கேற்காது என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்

 ஏனென்று சொன்னால் கடந்த ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பள்ளிகள் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் முடங்கின. அப்போதே செவிசாய்க்காத அரசு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் மட்டும் அரசின்  கவனத்தை ஈர்க்க முடியுமா? என்ற ஐயம் ஏற்படுகிறது.

 அதுமட்டுமல்லாது
மார்ச் 1 முதல் 12ஆம் வகுப்பு,  11ஆம் வகுப்பு,  10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும்,  தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்து  முழு ஆண்டு தேர்வும் நடைபெற இருப்பதாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணி செய்ய இருப்பதாலும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

தகவல் :

சா அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலகூட்டமைப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post