இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு !!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
'இலவச தையல் இயந்திரங்கள் பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். 
 
 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு, இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், நலிவுற்றோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. பிறந்த தேதி, வயது, ஜாதி, தையல் இயந்திரம் பெறும் காரணம், முகவரி, வருமானம், தையல் பயிற்சி பெற்ற விபரம் ஆகியவற்றை, சான்றுடன் இணைக்க வேண்டும். 
 
கணவனால் கைவிடப்பட்டவர்கள், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் இணைக்க வேண்டும். மேலும், 2 பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோவுடன், வரும், 25க்குள், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள, சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலகத்தில், விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments