குரூப் - 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு, மார்ச், 3ம் தேதியும், முதன்மை எழுத்து தேர்வு, மே மாதம் கடைசி வாரத்திலும் நடக்கும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.அதன்படி, முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.எனவே, தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு, போதிய கால அவகாசம் தர வேண்டும் என்பதால், முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என, உத்தேசிக்கப்பட்டுள்ளது.முதல்நிலைத் தேர்வு, முன்னர் அறிவித்தபடி, மார்ச், 3ம் தேதி நடக்கும். எனவே, விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கால அவகாசத்தை பயன்படுத்தி, புதிய தேர்வு திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராக வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments