வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை. - JACTTO-GEO

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


🔥
🛡 ஜாக்டோ ஜியோ வின் நெஞ்சுரம் மிக்க போராளிகளுக்கு புரட்சிகர போராட்ட வாழ்த்துக்கள்

🔥
🛡 22-ம் தேதியில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று கொண்டிருக்கக் கூடிய உங்களுடைய உறுதியினால் போராட்டமானது வெற்றிகரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

🔥
🛡 தற்பொழுதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அவர்கள் தாமாக முன்வந்து தொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

🔥
🛡 வழக்கு விசாரணை முடிந்த பின்பு அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

🔥
🛡 பல்வேறு கட்ட இழப்புகளைச் சந்தித்து நமது ஜாக்டோ-ஜியோ போராளிகள் தொடர்ந்து களத்தில் உள்ள வேளையில், தவறான பகிர்வுகள் பரவுவதும் பகிர்வதும் களத்திற்கு ஏற்புடையதல்ல.

🔥
🛡 வலைதளங்களிலோ ஊடகங்களிலோ வரும்  தேவையற்ற வீண் வதந்திகளை நம்பாது *மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வழி தரும் செய்தியை மட்டும் கேட்டு செயல்படுங்கள்.*

🔥
🛡 *போராட்டம் வாபஸ் பெறுவதாக வெளியான காட்சிப் பதிவு 2017* போராட்டத்தின் போது மதுரை நீதிமன்றக்கிளையில் புதிய தலைமுறையில் எடுக்கப்பட்டது.

🔥
🛡 மேலும் *இன்று (29.01.19) இரவு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்* நடைபெற உள்ளது.

🔥
🛡 அக்கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த முடிவுகள் வெளியாகும்.

🔥 அதுவரையில் *ஜாக்டோ-ஜியோ போராளிகள் யாரும் வேறு எந்த விதமான வதந்திகளையும் நம்பாமல் தொடர்ந்து உறுதியுடன் களத்தில் நிற்கக் கேட்டு கொள்கிறோம்.*

_தோழமையுடன்,_
*JACTTO-GEO.*

Post a comment

0 Comments