மாணவர்கள் பிறந்த நாளுக்கு புத்தகங்கள் தரும் ஆசிரியர்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


 மாணவர்கள் பிறந்த நாளுக்கு புத்தகங்கள் தரும் ஆசிரியர்கள்

புதுக்கோட்டை, அரசுப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு, பிறந்த நாள் பரிசாக, ஆசிரியர்கள், புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.புதுக்கோட்டை நகரில், 1958ல், மழலையருக்காக துவங்கப்பட்ட பள்ளி, புரவலர்கள் மற்றும் அரசின் உதவியால், படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது, எட்டாம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளியாக செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில், மழலையருக்கு, 'ஏசி ஸ்மார்ட் கிளாஸ்', கற்றல், கற்பித்தல் வகுப்பறை, பள்ளி வளாகத்தில், சி.சி.டி.வி., கேமராக்கள் என, தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் வசதிகள் உள்ளன.இங்கு படிக்கும் மாணவர்களின் பிறந்த நாளை, பள்ளியின் நுழைவு வாயிலில் உள்ள கரும்பலகையில் எழுதி வைக்கின்றனர். மேலும், பிறந்த நாள் காணும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் புத்தகங்களை பரிசாக வழங்கி வருகின்றனர். இது, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது.தலைமையாசிரியர் சிவசக்திவேல் கூறியதாவது:பிறந்த நாள் பரிசாக, புத்தகங்களை பெறும் மாணவர்கள், தங்கள் சார்பில், பள்ளி நுாலகத்திற்கு புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். இதனால், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்படுகிறது. இப்பள்ளியில் நவீன கற்றல் முறையால், 40 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, இரண்டு ஆண்டுகளில், 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியராக அதிகரித்துள்ளது

Post a comment

0 Comments