சென்னை எம்.ஆர்.சி.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'இது நம்ம ஊர் மீன்' என்ற பெயரில் ஆன்லைன் விற்பனை, வீட்டுக்கே மீன் விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.
பல மாநிலங்கள் வழங்காத போதும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் ஊதிய உயர்வு வழங்கியுள்ளதாகவும், நிதிநிலை உணர்ந்து, மாணவர், மக்கள் நலன் கருதி பணிக்கு திரும்ப கேட்டுக் கொண்டார். அரசியல் நோக்கத்துடன் சில சங்கங்களின் தூண்டுதலின் காரணமாக தான் போராட்டம் தொடர்வதாகக் கூறிய அவர், முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பாவிட்டால் நிர்வாக நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகும் என எச்சரித்துள்ளார்.
Post a Comment