கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய
வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்
வலியுறுத்தியுள்ளார்
.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்படுகின்றனர்.
இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல். அவர்களை அழைத்துப்பேசி சுமுகமான முடிவை எடுக்க வேண்டும்.
250க்கும் மேற்பட்ட சங்கங்கள் அரசுக்கு எதிராக ேபாராடி வருவதால், அரசு அலுவலகங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்களின் தேவைகள் நிறைவேறாமல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment