Title of the document

ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்யாவிட்டால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்” என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் எச்சரித்துள்ளார்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறியதாவது: ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யும் படலத்தில் இறங்கியுள்ளது. இது வன்மையாக  கண்டிக்கத்தக்கது. உடனடியாக கைது செய்த நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப  பெற வேண்டும்.

 மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பும் அவர்களுக்கு ஆதரவாக  போராட்டத்தில் குதிக்கும் என்று எச்சரிக்கிறோம்.அவர்களுக்கு ஆதரவாக சத்துணவு, அங்கன்வாடியை சேர்ந்த சுமார் 50,000 பேர் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர்,  வாழ்வாதார ஓய்வூதியம் கூட இல்லாமல் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 30 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை, குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்,  மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட சலுகைகளை சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர்  மாளிகை முன்பு மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். உண்ணாவிரதத்தில் அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில்  அந்த உண்ணாவிரதம் தொடர் உண்ணாவிரதமாக மாறும் என்று அரசுக்கு எச்சரிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜாக்டோ- ஜியோ  சங்கத்துக்கு ஆதரவாக அங்கன்வாடியை சேர்ந்த சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள்.
கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் அந்த உண்ணாவிரதம் தொடர் உண்ணாவிரதமாக மாறும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post