செய்முறை பொதுத்தேர்வில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பிளஸ், 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ம் தேதி முதல், 19ம் தேதி வரை, பொதுத்தேர்வு நடக்கிறது. அதற்கு முன் செய்முறை பாடங்களுக்கான, தேர்வு நடைபெறும். பிப்.,1ம் தேதி முதல், 12ம் தேதிக்குள், இத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டுமென, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, பொதுத்தேர்வு மாணவர்களை தயார்ப்படுத்தும் முயற்சியில், கல்வித்துறை இறங்கியுள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போராட்டங்களால் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்' என்றார்
Post a Comment