அரசுப் பள்ளிக்கு ஒரு லட்சம் நன்கொடைசிவகங்கை மாவட்டம் அரசு உயர்நிலைப்
பள்ளி சித்தலூரில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியவர் திரு.முனியாண்டி. அவரது மகன் மற்றும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் திரு.குமரேசன் அரபு நாட்டில் பணி புரிந்து வருகிறார். அவர் இப்பள்ளியின் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை அளித்தார்.
இவரும் இவர் தந்தையும் மாதம் ரூ. பத்தாயிரம்  செலவு செய்து மாணவர்களுக்கு பள்ளி சென்று வர  வாகன வசதி செய்து கொடுத்துள்ளார்கள்