Title of the document


கோவை அருகே உள்ள கருமத்தப்பட்டி என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்த கொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கருமத்தப்பட்டி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த அந்தோணி ஆரோக்கியதாஸ் என்பவர் இன்று திடீரென தாய் புவனேஸ்வரி, மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவை பகுதியை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை குறித்து ஆசிரியர் அந்தோணி எந்தவித கடிதமும் எழுதி வைக்காததால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று தெரியவில்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post