ஜாக்டோ - ஜியோ: தடையை மீறி போராட்டம்
ஜனவரி 28-ம் தேதிக்குள் பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில், அதனை மீறி, ஆசிரியர்கள் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோ 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22 ம்தேதி கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழவதும் பல்வேறு மாவட்டங்களில், போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 28-ம் தேதிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. அதனை மீறி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 7வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 7 ஆயிரத்து 30 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தை பொறுத்தவரை 90 விழுக்காடு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலையே காணப்படுகிறது. ஒரு சில பள்ளிகள் பூட்டியே கிடக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் பின்னர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையால் 14 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 7030 ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு 17 b நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தமிழக அரசு இன்று ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று காலையும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் 90 சதவீத பள்ளிகளில் மாணவர்கள் வந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது ஒரு சில பள்ளிகள் பூட்டியே கிடக்கின்றன இதனால் மாணவர்கள் கல்வியில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்ற உத்தரவின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக ஆசிரியர் பயிற்சி கல்வி முடித்தவர்கள் மற்றும் B.ed., M.ed முடித்த 5000 பேர் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களது விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது இன்று மதியத்திற்குள் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பலர் நாங்களும் இப்படி ஒரு காலத்தில் குறைந்த சம்பளத்திற்கு ஆசைபட்டு தான் இந்த பணிக்கு வந்தோம். ஆனால் தங்களுக்கு தகுந்த ஊதியம் இன்று வரை கிடைக்கவில்லை.
இன்று தற்காலிகமாக பணியில் சேர விரும்புவர்களும் ஒரு நாள் நிரந்தர பணி நியமணம் மற்றும் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் கண்டிப்பாக குதிப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.
Post a Comment