Title of the document

தொடக்க பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் தமிழக அரசு முயற்சியால் 3,000 தலைமை ஆசிரியர்கள் பதவி தரம் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 105 பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் பதவி தரம் குறைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசின் இந்த முடிவால் ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.


தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் 1,500 அரசு ஆரம்பப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் கீழ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 878 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். 


இதில் 32 பள்ளிகளில் 1 மாணவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காத தொடக்கப்பள்ளிகளை வேறு அரசு பள்ளிகளோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post