Title of the document

நிர்வாக மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ேம மாதம், பணியிட மாறுதல் வழங்கப்படும்.

கவுன்சலிங் மூலம் வழங்கப்படும் இந்த பணியிட மாறுதலில், ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய ஊருக்கே பணியிட மாறுதல் பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் சற்று தாமதமாக ஜூன் மாதம்தான் நடந்தது. பொதுவாக இந்த வகை கவுன்சலிங்  சென்னையில் ஒரே இடத்தில் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களின் மூலம் ஆன்லைனில் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடந்தது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நடந்த விசாரணையின் அடிப்படையில், பணியிட மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்கள் பட்டியலை நீதிமன்றம் கேட்டுள்ளது. 

இதையடுத்து, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நிர்வாக காரணங்களுக்காக அனைத்து வகை  ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட பணியிட மாறுதல் தொடர்பான இறுதிப் பட்டியலை நீதிமன்றம் கேட்டுள்ளது. அதனால் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆன்லைன் கவுன்சலிங்கில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல்களை அனுப்ப வேண்டும். 

பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பெயர்கள் குறித்த தகவல்கள், இணை இயக்குநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இல்லாத பெயர்களை தனியாக குறித்து அனுப்ப வேண்டும். பட்டியலில் இடம் பெறாத ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். இ்வ்வாறு முதன்மைச் செயலாளர் தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post