*கிராமப்புற பள்ளிகளில், 'நெட்வொர்க்', பிரச்னையால்,
மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை
கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன*
*அரசு பள்ளி மாணவர்களின் வருகையை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் நடைமுறை செப்., மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது*
*வகுப்பு ஆசிரியர்கள், அவர்களது, 'ஆன்ட்ராய்ட்',
மொபைல்போனில், வருகை பதிவு செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், மாணவர்கள்
வருகையை பதிவிட வேண்டும்*
*கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், 'ஆன்ட்ராய்ட்'
மொபைல்கள் வைத்திருந்தாலும், 'நெட்வொர்க்' பிரச்னையால், பலரும் சாதாரண
'மொபைல்போன்'களை பயன்படுத்துகின்றனர்*
*தற்போது, கல்வித்துறை உத்தரவால், 'நெட்வொர்க்', இல்லாத
பள்ளிகளில், 'ஆன்லைன்' வருகை பதிவுக்கு ஆசிரியர்கள் பெரிதும்
சிரமத்துக்குள்ளாகின்றனர்*
*பள்ளிகள் அமைந்திருக்கும் கிராமங்களில், 'நெட்வொர்க்', இருக்கும் இடங்களுக்கு சென்று, செயலியில், வருகையை பதிவேற்றம் செய்கின்றனர்*
*இப்பிரச்னை இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வேறு ஆலோசனையும் வழங்கப்பட்டது*
*வீட்டில் 'ஆன்லைன்' செயலியை துவக்கிக்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன் வருகை பதிவு செய்துகொள்ளலாம்*
*மீண்டும் 'நெட்வொர்க்', உள்ள இடத்துக்கு செல்லும்போது வருகைப்பதிவை தானாக பதிவாகிவிடும் என ஆலோசனை வழங்கப்பட்டது*
*ஆனால், பலரும் இதனை முயற்சி செய்தும், நேரம் மாறி
காட்டுவதாகவும், சில நாட்களில், பதிவு ஆகாமல் போய்விடுவதாகவும் ஆசிரியர்கள்
புகார் கூறுகின்றனர்.தற்போது, கல்வித்துறை 'ஆன்லைன்' வருகைப் பதிவை
தீவிரமாக கண்காணிக்கிறது*
*இப்பிரச்னையால் வருகைப்பதிவு, இப்பதிவை செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை தொடர்ந்து கல்வித்துறை பட்டியலிடுகிறது*
*இத்தகைய வருகை பதிவு செய்வதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு
காணாமல் கல்வித்துறை பள்ளி நிர்வாகங்களை புகார் கூறுவதால், ஆசிரியர்கள்
செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்*
Post a Comment