Title of the document

Image result for ctet

நாடு முழுவதும் 16.91 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளான சிபிஎஸ்இ, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித் தேர்வை கடந்த ஆண்டு வரை சிபிஎஸ்இ நடத்தி வந்தது.
இந்த ஆண்டு தேசிய அளவிலான தேர்வுக் குழுமம் தொடங்கிய நிலையில், சிபிஎஸ்இதான் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த 7-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 16 லட்சத்து 91 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு வரை இந்த தேர்வுகளின் விடைக்குறிப்புகள் தேர்வு நடந்த 10 நாள்களுக்குள் வெளியிடப்பட்டு விடும்.
ஆனால் கடந்த 7-ஆம் தேதி நடந்த தகுதித் தேர்வின் விடைக்குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், விடைக்குறிப்புகளை டிச. 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிக்குள் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, 2019 ஜனவரி மாத இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.
தகுதித் தேர்வு எழுதியவர்கள் மேற்கண்ட விடைக்குறிப்புகளை சிபிஎஸ்இ இணைய தளமான ctet.nic.inp இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதித் தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் சான்றுகள் வழங்கப்பட உள்ளன.
மதிப்பெண் பட்டியல்கள், தேர்ச்சிக்கான சான்றுகள் அனைத்தும் க்யூ.ஆர். குறியீடு கொண்டதாக இருக்கும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post