பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் கடந்த 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், 2009ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதியத்தைவிட 3,170 குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இடைநிலை ஆசிரியர்களில் ஒரு சாரார் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், ஒரே கல்வித்தகுதியில் ஒரே பணியில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் அரசுத்தரப்பில் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, டிசம்பர் 23ம் தேதி (இன்று) முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
அதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அரையாண்டு விடுமுறை காலத்தில் போராட்டத்தை அறிவித்துள்ளோம். திட்டமிட்டபடி எங்கள் காலவரையற்ற போராட்டம் தொடரும் என பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் கூறினர்.
Post a Comment