பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்!!


பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.
 பரமக்குடி செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அவர் பேசியது:
 மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி, சீருடைகள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் காலையிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி வந்துவிட்ட நிலையில், விரைவில் மருத்துவக்கல்லூரியும், விமான நிலையமும் வர உள்ளது.
 ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அனைத்து ஊராட்சிகளையும் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.