பிளஸ் 2 அரையாண்டு தேர்வில் லீக்கான வேதியியல் கேள்வித்தாளிேலயே பரீட்சை நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த 10ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று வேதியியல், வணிகவியல் தேர்வுகள் நடந்தன. நேற்று முன்தினம் பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு வேதியியல் தேர்வு வினாத்தாளின் 2 பக்கங்கள், இணையதளத்தில் வெளியானது.
பிளஸ்2 வுக்கு ஆங்கில வழி கேள்வித்தாளும், பிளஸ்1க்கு தமிழ்வழி கேள்வித்தாளும் வெளியானது. இதைப் பார்த்து கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த வாரம் பிளஸ் 2 உயிரியல் தேர்வு கேள்வித்தாள் என்ற பெயரில் இணையதளத்தில் வெளியான கேள்வித்தாளும், கடந்த 19ம் தேதி பள்ளிகளில் நடைபெற்ற உயிரியல் தேர்வின் போது வழங்கப்பட்ட கேள்வித்தாளும் ஒரே மாதிரி இருந்தது. இதனால் நேற்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முதுகலை வேதியியல் ஆசிரியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
முடிந்தவரை தங்களுடன் தொடர்பில் உள்ள மாணவ, மாணவியரிடம் சில வேதியியல் ஆசிரியர்கள் பேசி, முக்கியமான கேள்வி என சில கேள்விகளை கூறியுள்ளனர். இந்த நிலையில், நேற்று தேர்வறையில் மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட வேதியியல் கேள்வித்தாளை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிளஸ்2 வேதியியல் கேள்வித்தாள் என்ற பெயரில், இணையதளத்தில் வெளியான ஆங்கில வழி கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்த அதே கேள்விகள், வரிசை எண் மாறாமல் அப்படியே வந்திருந்தது. தமிழ் வழி கேள்வித்தாளில் அதே கேள்விகள் அப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிளஸ் 1 வேதியியல் கேள்வித்தாள், கடந்த காலாண்டு தேர்வில் வெளியான கேள்வித்தாளை, அரையாண்டு தேர்வு என மாற்றம் செய்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், அந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முக்கியமான போட்டித்தேர்வுகள், அரசு பொதுத்தேர்வுகளின் கேள்வித்தாள்கள் கடந்த காலங்களில் லீக் ஆகியுள்ளது. தற்போது அரையாண்டு தேர்வு வினாத்தாள் கூட லீக் ஆவது, கல்வித்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment