Title of the document


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 2018-19ம் நிதியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை பள்ளிகளில் பயிலும்  மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தேவையான வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளி மானியம் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில்  விடுவிக்கப்பட்டுள்ளது.

15 மாணவர்கள் எண்ணிக்கைக்கு மேல் உள்ள 6058 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மொத்தம் ₹38 கோடி 6 லட்சத்து 50 ஆயிரம்  வழங்கப்பட்டுள்ளது. 15  மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மானியம் பள்ளி அளவிலேயே செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை வகுத்து  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாநில திட்ட இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

l பள்ளிகளுக்கு விடுவிக்கப்படும் நிதியில் 10 சதவீத ெதாகை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். கழிப்பறையை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருக்க இந்த நிதி பயன்படுத்த  வேண்டும். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களை கொண்டு மாணவர்களுக்கு தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

l ஒரு மாணவர் குழுவில் ஒரு ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் மாணவர்கள் இடம்பெற செய்து சைல்டு கேபினட் ஏற்படுத்தி மாணவர் குழுக்கள் அமைத்து உரையாட செய்தல்  வேண்டும். பள்ளி அளவிலான குழு பள்ளி வளாக தூய்மை, பள்ளி முகப்பு தூய்மையை பராமரிக்க செய்தல் வேண்டும்.

* பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பேரணி நடத்துதல், சுற்றுப்புற தூய்மை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்துதல், தூய்மை கருத்து பற்்றி ஆரோக்கியமான கட்டுரை, கேலி சித்திரம் வரைதல்,  ‘சுலோகன்’ உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடத்துதல் மூலம் தூய்மையின் இன்றியமையாமையை உணர செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளலாம்.

* வகுப்பறை தூய்மை, பள்ளி வளாக தூய்மை, கழிவுநீர் தேங்கா வண்ணம் தூய்மையாக வைத்தல், கொசு மருந்து தெளித்தல், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு தேவையான  பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

* ஆய்வக உபகரணங்கள் மாற்றியமைத்தல் மற்றும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அறிவியல் செயல்முறைகளுக்கான ஆய்வகத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வேதி  பொருட்கள் வாங்குதல் வேண்டும்.

* மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும் அனைத்து கழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்விதமாக  கைப்பிடிகள், தரை ஓடுகள், கழிப்பறை கோப்பைகள் அமைக்க வேண்டும்.

*முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பள்ளி பார்வையின்போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும்,  பொருட்கள் வாங்கப்பட்டதையும் கண்காணிக்க வேண்டும். அதில் முழு சுகாதார பணிகளுக்கு 10 சதவீத தொகை பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post