Title of the document
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, கியூ.ஆர்., கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனை, வரும், 14ம் தேதி நடக்கிறது.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு தொழில்நுட்ப திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இதன்படி, அனைத்து மாணவ - மாணவியருக்கும், 'சிப்' பொருத்தப்பட்ட, 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, வகுப்பு, பள்ளியின் பெயர், ரத்தப் பிரிவு, ஆதார் எண் உட்பட, அனைத்து விபரங்களும் இடம் பெறும்.கல்வி மேலாண்மை தகவல் அமைப்பால், மாணவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள, 'எமிஸ்' என்ற, ஒருங்கிணைந்த அடையாள எண்ணும் இருக்கும். மாநிலம் முழுவதும் உள்ள, 37 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 71 லட்சம் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டம், 12.70 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த அட்டை களில், சுய விபரங்கள் அடங்கிய, கியூ.ஆர்., கோடும் இணைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் நேற்று அறிவிக்கப்பட்டது. தேசிய அளவில் தரம் வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த நிறுவனங்களுக்கான முன் விளக்க கூட்டம், வரும், 14ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கிறது. அதில், அடையாள அட்டைக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் குறித்து, அதிகாரிகள் விவரிக்க உள்ளனர். வரும், 18ம் தேதிக்குள், தனியார் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post