டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க, தலைமை செயலக பணியாளர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க, தலைமை செயலக பணியாளர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் அந்தோணிசாமி, செயலர் ஆறுமுகம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:இயற்கை பேரிடர் ஏற்படும் போதெல்லாம், தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், தன் பங்களிப்பை முழு மனதோடு வழங்கி வருகிறது.அதேபோல, தற்போது, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, டெல்டா மக்களின் துயர் துடைக்க, தமிழ்நாடு தலைமை செயலக பணியாளர்கள், தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க, மனித நேயத்துடன் முன் வந்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.