குழந்தைகள், உண்டியலில் சேமித்து வைத்திருந்த, 7,200 ரூபாயை, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக, மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய நிகழ்ச்சி


அரியலுாரைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் குழந்தைகள், உண்டியலில் சேமித்து வைத்திருந்த, 7,200 ரூபாயை, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக, மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அரசு மட்டுமன்றி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், அரியலுாரைச் சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் என்பவரின் குழந்தைகள் நிறைநெஞ்சன், சாதனா ஆகியோர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த, 7,200 ரூபாயை, புயல் நிவாரண நிதிக்காக, மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் நேற்று வழங்கினர்.கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள், அவர்களை பாராட்டினர்.