Title of the document

கடலில் அலைகள் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?
     நிலாவும் சூரியனும்தான். இவை இரண்டும் மாறிமாறி செலுத்தும் ஈர்ப்பு விசைதான் அலைகளுக்குக் காரணம். இதனால் கடலில் உயர்வான அலையும் தாழ்வான அலையும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. பூமியின் சுழற்சியாலும் காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் அதிகரிக்கின்றன.
பல நீரோட்டங்கள் ஆழ்கடலுக்குள் மாவு அரைக்கும் கன்வேயர் பெல்ட்டுகள் போலப் பிரம்மாண்டமாகச் சுழல்கின்றன. இப்படி ஏற்படும் விசைகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்குள் பாறைகள் நொறுங்குகின்றன. பாறைகள் நொறுங்குவதால் ஏற்படுவதுதான் கடல் மணல்.
ஒரு கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடல் மணல், அந்த இடத்தில் உள்ள பாறைகளிலிருந்து வந்தது என்று மட்டும் கூறிவிட முடியாது. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தின் ஹர்வாடா கடற்கரையில் உள்ள மணல், வடக்கே மகாராஷ்டிரத்திலிருந்து வந்தது.
இப்படி அலையின் போக்கில் மணல் பயணிக்கவும் செய்கிறது. அது சரி, கடற்கரையில் உள்ள மணல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்றவை கடல் மணலில் நிறைய உள்ளன. இவற்றையும், கடல் மணலில் உள்ள வேதித்தன்மை, அதிலுள்ள கனிமங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அந்தந்த இடத்தின் பூர்வீக ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post