இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு தகவல்! 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. ஆனால்,  இதில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள்  எழுந்தது. அதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல்  NTA அமைப்பு நீட் நுழைவு தேர்வை நடத்துகிறது.

தேசிய அளவில், உயர் கல்விக்கான  நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தன்னிச்சையான அதிகாரம் கொண்ட தேசிய தேர்வு முகமை (National Testing Agency-NTA) என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு மூலமே நீட் தேர்கள் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு 2019 மே, 5ல் நடக்க இருக்கும் நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in என்ற இணையதளத்தில் மூலம் இன்று நவம்பர் 1 முதல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம். இதற்காக நாடுமுழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நாடு தமிழ் உள்பட, 10க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும், தமிழக அரசால்  அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.  3200 ஆசிரியர்கள் கொண்டு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

0 Comments:

Post a Comment