Title of the document


தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுவிழந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை குறித்து அவர் கூறியதாவது, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்கு நகர்ந்து வலுவிழக்க கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, கரூர், சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்; புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post