Title of the document



2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி பெருத்தப்படும் என்று கூறினார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியுடன், அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு செய்யப்படும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கின.

முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவு செய்யப்படும்.

இதேபோல் 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 21,774 பேரும் வருகைப் பதிவு செய்யப்படும். இதற்காக ரூ.15.30 கோடி செலவிடப்பட்டு பயோமெட்ரிக் கருவி பெருத்த திட்டமிடப்பட்டது.

இவற்றை பரிசீலித்து, 7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்கள் பயன்பெற, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post