Title of the document


11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா மடிக்கணினி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதிகளை அறிமுகப்படுத்தினார். இவருடன் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஸ்கில் ட்ரைனிங் என்ற நடைமுறை பயிற்சி விரைவில் பள்ளிகளில் அமல் படுத்தப்படும் எனவும் அதன் மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் வேலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post