Title of the document
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் இன்று முதல் 26 ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம்  1 முதல் 18 வயது  வரையுள்ள செவித்திறன் குறைபாடு, பார்வைத்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 8  மண்டலங்களில் இன்று முதல் 26  ம் தேதி வரை நடைபெறுகிறது. 23 ம் தேதி ராயபுரம் மண்டலத்தில் சென்னை உருது பெண்கள் தொடக்கப்பள்ளியிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் சிஐடி நகரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியிலும்,
24 ம் தேதி கோடம்பாக்கம் மண்டலம் தி.நகரில் உள்ள  சென்னை நடுநிலைப்பள்ளியிலும், ராயபுரம் மண்டலத்தில் சூளையில் உள்ள  சென்னை நடுநிலைப்பள்ளியிலும், 25ம் தேதி திருவிகநகர் மண்டலத்தில் பெரம்பூரில் உள்ள  சென்னை தொடக்கப்பள்ளியிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை சமுதாய கல்லூரியிலும், 26 ம் தேதி தேனம்பேட்டை மண்டலத்தில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சென்னை  நடுநிலைப்பள்ளியிலும், அண்ணாநகர் மண்டலத்தில் சேத்துப்பட்டில் உள்ள  சென்னை நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.  
முகாமிற்கு வருபவர்கள் குழந்தைகளின் 4 புகைப்படம், வருவாய் சான்றிதழ், ஆதார் அட்டை, மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post