`5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?' - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்


தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதுடன் 5,000 அரசுப்பள்ளிகள் மூடுவதா என முழங்கினார்.

தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை பொதுத்துறை அலுவலக வளாகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களான ரெங்கசாமி,மு.ராஜாங்கம்,க.சு.செல்வராசு ஆகியோர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், அரசு ஊழியர் சங்கப் பொறுப்பாளர் குமரேசன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கணேசன், முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மணிமேகலை, கல்லூரிப் பேராசிரியர் சங்கம் நாகேஸ்வரன், அங்கன்வாடி ஊழியர் சங்கம் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்கம் மலர்விழி, ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மகேந்திரன், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். சிலர் குடை பிடித்தபடி அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.

0 Comments:

Post a Comment