Title of the document

பிளஸ்1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும்’’ என்று பள்ளிக் கல்வி் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். சென்னை எழும்பூர் மாகாண பெண்கள் மேனிலைப் பள்ளியில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஸ்மார்ட் கிளாசுக்கு கணினி சாதனங்களை இலவசமாக வழங்கியுள்ள ஜப்பான் நாட்டின் எல்மோ நிறுவனத்தின் துணைத் தலைவர் சிஞ்சி அசானோ மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, சென்னை எழும்பூர் மாகாண பெண்கள் மேனிலைப் பள்ளியில் 2 மாதத்துக்கு முன்பு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டது. அந்த பள்ளியில் இப்போது ஸ்மார்ட் கிளாஸ்  தொடங்கப்பட்டுள்ளது.   விரைவில் மாதிரிப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். இதுதவிர  1 முதல் 5ம் வகுப்பு வரையும், 6 முதல் 8ம் வகுப்பு வரையும் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள் நிறங்கள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய சீருடை அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும். அடுத்த மாதம் இறுதிக்குள் 3 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். 
பிளஸ் 1 வகுப்புக்கு கட்டாய பொதுத் தேர்வு என்று அறிவித்தோம், பின்னர் ஏன் அதில் மாற்றம் செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2க்கு தேர்வு உள்ளது. மாணவர்களின் தரம் உயர்த்துவதற்காக இடையில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தொடர்ந்து 3 தேர்வு எழுத வேண்டிய நிலை உருவானது. அதே நேரத்தில் பிளஸ் 1 மாணவர்கள் இவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படும். அரசுப் பள்ளியாக இருந்தாலும், தனியார் பள்ளியாக இருந்தாலும் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  பிளஸ் 1 தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதில் கட்டாயமாக பிளஸ் 1 வகுப்பு பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். இதுதொடர்பாக சற்றறிக்கை அனுப்பியுள்ளோம். இதன்படி செயல்படுகிறார்களா என்று கண்காணிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
விடுப்பு எடுத்தால்...
அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை (இன்று) ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில் நாளை அனைத்து பள்ளிகளும் நடக்கும். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஒருநபர் குழுவிடம் தெரிவிக்கலாம். விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதனால் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் சம்பளத்தை இழக்க நேரிடும். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது’ என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post