Title of the document
தமிழகத்தில் இடைநிலைக் கல்வி (SSLC), மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர்/அக்டோபரில் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019 - 2020 கல்வியாண்டு முதல் ரத்து செய்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்  பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள  அரசாணையில், ``இனி வருங்காலங்களில் இடைநிலை (SSLC), மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) தேர்வர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மற்றும் ஜூன் / ஜூலை ஆகிய பருவங்களில் மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்திட உரிய அரசாணையினை வெளியிடுமாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்று, தமிழகத்தில், இடைநிலை (10th), மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு ஜூன் / ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்வு அறிமுகப்படுத்தியபின், செப்டம்பர்/அக்டோபர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

எனவே, வரும் கல்வியாண்டு முதல், அதாவது 2019–2020 முதல் நடத்தவிருக்கும் அரசு பொதுத் தேர்வுகளான இடைநிலைக் கல்வி (SSLC) மற்றும் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதி தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு, மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜூன் / ஜூலை பருவ சிறப்பு துணைத்தேர்வு ஆகிய தேர்வுகளை மட்டும் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற இடைநிலைக் கல்வி (SSLC) மற்றும் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) மாணாக்கர்களுக்காக நடத்தப்படும் செப்டம்பர் / அக்டோபர் பருவ துணைத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post