அரசு பள்ளி சேதமடைந்ததால் மழையில் நனைந்தபடி படிக்கும் மாணவர்கள்

கெங்கபுரம் தொடக்க பள்ளியின் கூரை சேதமடைந்ததால் மழையில் குடைபிடித்தபடி மாணவர்கள் பாடம் படிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் கெங்கபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 29 மாணவர்கள் படித்து வருகின்றனர், இரண்டு ஆசிரியர் உள்ளனர். இப்பள்ளியின் கூரை ஓடுகளால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக உள்ளது.
இந்த ஒடுகள் சேதமடைந்து வெயில் மழையில் மாணவர் சிரமப்பட்டு படித்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை மேல்மலையனூர் ஊராட்சி, மற்றும் கல்வி துறையிடம் மனு கொடுத்தும் இதுவரையில் சீர் செய்யவில்லை. நேற்று தொடர் மழையால் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் குடை பிடித்து கொண்டு கல்வி கற்க வேண்டிய அவலநிலையில் இருந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெங்கபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 Comments:

Post a Comment