சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம்

watch video :


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் `மோதி விளையாடு பாப்பா` வெளியானது!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீமராஜா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் தற்போது விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
5 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை உமேஷ் இயக்கியுள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
நாற்பது குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளுக்கு சரியான தொடுதல் மற்றும் தவறான தொடுதல் பற்றி அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் சிவா.
தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிக்கு, சிவகார்த்திகேயன் தன் பங்கிற்கு உதவும் வகையில் இப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் இப்படத்தில் நடித்துள்ளார்!