தமிழக தபால் துறைக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 25 ஆயிரம் பரிசு : கடைசி தேதி அக்டோபர் 31 வரை நீட்டிப்பு!

தமிழக தபால் துறை மூலம் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த ஜூன் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டிக்கு 'என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டியை தபால் துறை அறிவித்தது. இதில் 18 வயது வரை உள்ளவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இன்லாண்டு லெட்டர், என்வலப்பிரிவு உட்பட 4 பிரிவின் கீழ் கடிதங்கள் அனுப்பி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கடிதத்திற்கு முதல் பரிசாக 25 ஆயிரம், 2ம் பரிசாக 10 ஆயிரம், 3ம் பரிசாக 5 ஆயிரம் என்று 4 பிரிவிலும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பரிசும் பெறும் சிறந்த போட்டியாளரின் கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அஞ்சல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்

0 Comments:

Post a Comment