அஞ்சல் உறைக்கு ஓவியம் வரையும் போட்டி

அஞ்சல் உறைக்கு ஓவியம் வரையும் போட்டியில் பங்கேற்க, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பாராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சார்பில், அக்., 2 முதல், 4 வரை, 'சேலம்பெக்ஸ் 2018' என்ற விழா நடக்கிறது. இதில், அஞ்சல்துறை சார்பில், காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படுகிறது. இதில், 'தமிழகத்தில், காந்தியடிகளும், சுதந்திர போராட்டமும்' என்ற தலைப்பில் போட்டி நடக்கிறது. அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். வாட்டர் கலர், ஸ்கெட்ச், பெயின்ட் வகையான, ஓவியங்களில், ஏதாவது, ஒரு வகையில், 'ஏ4' அளவுள்ள தாள், அட்டையிலோ வரையலாம். படத்திற்கு கீழ், அதனை வரைந்தவரின் பெயர், பிறந்ததேதி, முகவரி, மொபைல்போன் எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஓவியத்தை, 'பி.ஆறுமுகம், சேலம் பெக்ஸ் விழா ஒருங்கிணைப்பு குழுத் தலைவர், அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கோவை-641002' என்ற, முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறுவோருக்கு, முதல்பரிசாக, பத்தாயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசாக, ஐந்து பேருக்கு, தலா, ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment