இயற்கை வேளாண்மை கண்காட்சி

வாழப்பாடியில், பாரம்பரிய அங்கக வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், இயற்கை வேளாண்மை கண்காட்சி, கருத்தரங்கம், நேற்று நடந்தது. தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி தலைமை வகித்தார். அதில், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் வேல்முருகன் பேசியதாவது: வரும் காலங்களில், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு, வரவேற்பு அதிகமாக கிடைக்கும். விவசாயிகள், இயற்கை உரங்களை பயன்படுத்துதல், விதை நேர்த்தி, மண்புழு உரம், உர மேலாண்மை ஆகியவற்றில் ஆர்வம் காட்டினால், எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். இதில், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள், கொல்லிமலை தேன், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டு, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

0 Comments:

Post a Comment