Title of the document
கல்லூரி மாணவியருக்கு, மூன்று நாள் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.


கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், கடந்த, 18 முதல், 20 வரை, பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவியருக்கு, மூன்று நாள் குறுகியகால கல்வெட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கல்வெட்டுகளைக் கொண்டு, வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது, புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, விளக்கமளித்தார். மேலும், 'தமிழி' என்றழைக்கப்படும் தொல் தமிழ் வரிவடிவ எழுத்துக்களை, எழுத,படிக்க பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற, 50 மாணவியருக்கு, கலெக்டர் பிரபாகர் சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை, அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் செய்திருந்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post