ஆசிரியர்களின் வருகை பதிவை, பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் !!


மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவை, பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதன் துவக்க விழா ஈ.வெ.ரா., பள்ளியில் நடந்தது. கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி பேசுகையில், ''மாநகராட்சியின் 54 பள்ளிகளிலும் இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அதன்படி சம்பளம் வழங்கப்படும்,'' என்றார். கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்

0 Comments:

Post a Comment