Title of the document


தாமத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்: சேலம் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி

சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக உள்ளவர் கணேஷ்மூர்த்தி, இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன், கரூர் மாவட்டத்திலிருந்து, மாறுதலில் சேலம் வந்தார். பணியில் சேர்ந்தது முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் போது காலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போடுவதோடு, அடுத்தநாளே சம்பளம் பிடித்தம் செய்ததற்கான ஆணையை வழங்கி விடுகிறார். மேலும் காலை, 9:15 மணிக்குள், பள்ளியின் வருகை பதிவை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, '17 ஏ' மெமோ வழங்குகிறார். இதனால், சேலம் மாவட்ட கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆசிரியர்கள் வேண்டுமென்றே தாமதமாக வருவதில்லை. போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னை காரணமாக தாமதம் ஏற்படலாம். இதற்காக, சம்பளம் பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என, வலியுறுத்தினோம். ஆனால், தாமத ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை முடிவில் அவர் உறுதியாக உள்ளார். இதனால், ஆசிரியர்கள் அனைவரையும் முன்னதாகவே பள்ளிக்கு வரும்படி, அறிவுறுத்தியுள்ளோம். ஆண்டாய்வு நடத்துவதை, இரவு வரை நீட்டிப்பதை தவிர்க்க வேண்டும் என, வலியுறுத்தினோம். தலைமையாசிரியர்கள் ஒத்துழைத்தால், இந்த தாமதம் ஏற்படாது என உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post