Title of the document



புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடி வட்டம்,
திருவரங்குளம் ஒன்றியம்,
கொத்தமங்கலம் கிராமம்,
சிதம்பரவிடுதி
தொடக்கப் பள்ளிக்கு மாவட்டக் கல்வி
அலுவலர்
திரு.திராவிடச்செல்வம்
அவர்கள் 14.09.2018 அன்று
Surprise Visit
செய்தார்.

அப்போது
முதல் வகுப்பு
மாணவி
ஒருவரை எழுப்பி தமிழ் புத்தகத்தில்
ஒரு எழுத்தை
காண்பித்து

"இது என்ன எழுத்து?"
என்று கேட்டார்.

அம்மாணவி
அந்த எழுத்தை
சரியாக கூறியதோடு அந்த பக்கம்
முழுவதையும்
படித்து காண்பித்தார்.

ஆச்சரியப்பட்ட
அலுவலர்வேறொரு மாணவனை
எழுப்பி படிக்க சொல்ல,

அவரும்
ஒரு பக்கம் முழுவதும்
பிழையின்றி
படிக்கவே அலுவலர்
அசந்தே போனார்.

அடுத்து வேறொரு மாணவனை
எழுப்பி,

"English Letters
சொல்லு"
என்றார்.

அம்மாணவன்
English Letters
பிழையின்றி
சொன்னதோடு,தலைகீழாகவும்
சொல்லி
அசத்தினான்.

அடுத்து வகுப்பு ஆசிரியர்
"English Book-லாம்
இவர்கள்
படிப்பார்கள்"
என்று கூற,அலுவலர்
ஒரு மாணவனை
எழுப்பி
படிக்க சொல்ல

அம்மாணவன்
English Book-ஐ

முதல் பக்கம்,
இரண்டாம் பக்கம்,
மூன்றாம் பக்கம்
என்று படித்துக்கொண்டே போக அலுவலர்
பிரமிப்பின்
உச்சத்திற்கே
சென்றார்.

அடுத்து"எண்கள் தெரியுமா?"
என்று கேட்க வகுப்பு ஆசிரியர்
"கூட்டல் & கழித்தல்-லே
போடுவார்கள்"
என்று கூற அலுவலர்
ஒரு மாணவனை
எழுப்பி கரும்பலகையில்
கணக்கு போட
சொன்னார்.அம்மாணவன்
வகுப்பு ஆசிரியர் கூறிய
கணக்கை அவனே
கரும்பலகையில் எழுதி

46 +
57
103என்று விடை எழுதி அதை
படித்தும்
காண்பித்தான்.அனைத்து
மாணவர்களையும்வெகுவாக பாராட்டிய
அலுவலர்

ஆசிரியர்களையும்
பாராட்டி விடைபெற்றார்.

தமிழ் வாசித்தவர்கள்:
சு.காவியா
(த/பெ.சுதாகர்)

க.ஆகாஷ்
(த/பெ.கருப்பையா)

English Letters
தலைகீழாக சொன்னவர்:
கே.கவின்
(த/பெ.கேசவன்)

English Book படித்தவர்:
ஆ.பிரகதீஸ்வரன்
(த/பெ.ஆறுமுகம்)

கணக்கு போட்டவர்:
க.கவின்
(த/பெ.கருப்பையா)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post