Title of the document

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் டோக்கன் நடைமுறை திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.
சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய முதலில் வருவோருக்கு டோக்கன்கள் அளிக்கும் நடைமுறை 51 அலுவலகங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இத்திட்டம் திங்கள்கிழமை விரிவுபடுத்தப்பட்டது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன்கள் வீதம் 30 டோக்கன்களும், 1 முதல் 1.30 மணி வரையில் 5 டோக்கன்களும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கன்களும், பிற்பகல் 3 முதல் 3.30 மணி வரை 5 டோக்கன்களும் கொடுக்கப்பட்டதாக பதிவுத் துறை அதிகாரிகள் கூறினர்.
அனைத்து அலுவலகங்களிலும் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் வரை கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் புதிய திட்டம் தொடர்ந்து சீரிய முறையில் செயல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post