Title of the document


புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தமது ஆய்வறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அறிக்கை வழங்கப்படாததால் கடந்த மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post