Title of the document



ஒரு தும்மல் போடுவதிலிருந்து, உயிர் பிரியும் நிலை வரை நாம் நாடிச் செல்வது மருத்துவர்களைத்தான். ஆனால், அவர்களை நாம் பெரிதாக நினைவில் வைத்துக்கொள்வது கிடையாது. இன்று அவர்களுக்கான நாள். தேசிய மருத்துவர்கள் தினம்.

1. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும், ஜூலை 1ம் தேதி, மருத்துவ மாமேதையும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாளை, “தேசிய மருத்துவர்கள் தினம்” ஆகக் கொண்டாடுகிறோம்.

2. அவர் 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார்; 1962ஆம் ஆண்டு அதே நாளில் மரணமடைந்தார்.

3. நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது டாக்டர் ராய்க்கு 1961ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

4. உலக அளவில் முதன்முறை 1933ஆம் ஆண்டு, ஜியார்ஜியாவில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், இந்தியாவில் 1991ஆம் ஆண்டு முதல்தான் கொண்டாடப்படுகிறது.

5. பொதுவாக தேசிய மருத்துவர்கள் தினம் மருத்துவமனைகளிலும், துறைசார் அலுவலகங்களிலுமே கொண்டாடப்படுகிறது.

6. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

7. மருத்துவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக, பல ஆண்டுகளாக greeting card அல்லது carnation போன்ற பூக்களை அனுப்புகிறார்கள். நாமும் நம் வாழ்வில் முக்கியமானதொரு மருத்துவருக்குப் பூக்களைப் பரிசாக அனுப்பலாம்!

8. மிகவும் குறைவான பொருட்களையும் வசதிகளையும் வைத்துக்கொண்டு, மிகச் சிறந்த மருத்துவத்தைக் கொடுக்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்.

9. நம் நாட்டில் 70% மக்கள் கிராமப்புறத்தில் வசிப்பவர்கள். இவர்களுக்கும் முறையான மருத்துவத்தை அளிப்பதென்பது மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இருப்பினும், சொந்த செலவில் பல்வேறு இடங்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் நம் மருத்துவர்கள்.

10. மேற்குலகில் மிகப் பழைமையான மருத்துவ நெறிமுறைகளைக் குறிக்கிறது ‘Hippocratic Oath’.

- ஆஸிஃபா
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post